Other News

Bigg Boss Tamil 10 ‘The Common Man’: ஓவியா, ஆரி அருஜுனன் மற்றும் ராஜு ஜெயமோகன் ஆகியோரைக் கவர்ந்த தடீஸ்வரன்

பிக் பாஸ் தமிழ் 10: ‘தி காமன் மேன்’ நிகழ்ச்சி, பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையவிருக்கும் அடுத்த சாமானிய மனிதரைத் தேடும் வேட்டையைத் தொடங்கியுள்ளது. முதல் எபிசோட் ஒரு அறிமுகச் சுற்றுடன் தொடங்கியது, இதில் போட்டியாளர்கள் தங்கள் ஆளுமை, திறமைகள் மற்றும் கதைகள் மூலம் நடுவர்களைக் கவர ஒரு வாய்ப்பு கிடைத்தது. முதல் போட்டியாளர்களில் ஒருவரான தடீஸ்வரன், ஓவியா, ஆரி அருஜுனன் மற்றும் ராஜு ஜெயமோகன் ஆகியோர் அடங்கிய நடுவர் […]

நடிக்கும்போது வராத ‘ஜோசப்’ அரசியலில் வந்தது ஏன்.. சீமான் கேள்வி

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல்வர் விஜய்யை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து பேசியுள்ளார். அதில், “நடிக்கும்போது வராத ‘ஜோசப்’ பெயர் அரசியலில் வந்தது ஏன்? முதல் படத்தில் போடாதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார். “பெரம்பூர், திருச்சி கிழக்கில் போட்டியிட்டது ஏன்? அங்கெல்லாம் உங்கள் சாதி, மத வாக்குகள் அதிகம். நீங்களா சாதியை ஒழிக்கப் போகிறீர்கள்? உங்களை ஒழிக்காமல் இதையெல்லாம் எப்படி ஒழிப்பது?” என ஆவேசமாகச் சாடியுள்ளார்.

மாமியார் விதித்த நிபந்தனை – நடிகர் ரவி மோகன் பதில்

மனைவியைப் பிரிந்து வாழும் நடிகர் ரவி மோகன் குழந்தைகளைச் சந்திக்க நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், “குழந்தைகளை ரவி மோகன் பொது இடத்தில்தான் சந்திக்க வேண்டும்” என மாமியார் சுஜாதா நிபந்தனை விதித்திருந்தார். இதற்குப் பதிலளித்த ரவி மோகன், “நீதிமன்ற உத்தரவை சிலர் அவமதிப்பது வருத்தமளிக்கிறது. நான் உயிருடன் இருக்கும் வரை நாங்கள் நால்வரும் ஒரே அறையில் சேர்வது நடக்காது” என வேதனையுடன் கூறியுள்ளார்.

சிறையில் உள்ள திமுக MLA-வை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்

முதலமைச்சர் விஜயை மிரட்டும் வகையில் பொதுக்கூட்டத்தில் பேசியதாக கூறி கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்கண்டேயனை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார். புகாரின் அடிப்படையில் கடந்த ஜூலை 20ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்ட மார்கண்டேயன், தற்போது பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சிறையில் அவரை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், வழக்கு தொடர்பாகவும், தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

‘ஜனநாயகன்’ படத்தை இணையத்தில் பார்த்த வாலிபருக்கு முன்ஜாமீன்

இணையதளத்தில் லீக் ஆன ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பார்த்ததாக, சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப்குமார் என்பவர் மீது கடந்த ஏப்.3-ம் தேதி காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மனுதாரர் படத்தை இணையதளத்தில் பார்த்தார் என்பதை தவிர வேறு எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை என்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிபதி தனது […]

கரப்பான்பூச்சிகளின் அடுத்த திட்டம் தயாராகிறது?

இந்தியாவின் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எதிர்காலத் திட்டம் என்ன என்பது குறித்து கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தகவல் வெளியிட்டுள்ளார். இதன்படி பஞ்சாப்பில் பரீட்சை வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டம் குறித்து தமது கட்சி ஆலோசித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்திய போராட்டம் வெற்றி பெற்ற நிலையில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். நீட் […]

பதவியை ராஜினாமா செய்தார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்தார். நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக சிஜேபி இயக்கத்தினர் 35 நாட்களாக டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுடன் மத்திய அரசு அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரத்தில் உரிய […]

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு

இந்த ஆண்டின் இதுவரை காலப்பகுதியில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,905 ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை இந்த மாதத்தில் நேற்று (24) வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 25,530 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவாக 17,135 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கொழும்பு மாவட்டத்தில் 16,140 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 5,574 […]

‘Bitchat’ செயலியை முடக்க நடவடிக்கை: மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்தப் பகுதியில் இணையச் சேவைகள் முடக்கப்பட்ட போதிலும், மாணவர்கள் பயன்படுத்தி வரும் ‘Bitchat’ செயலியை முடக்குவதற்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இணைய வசதி அல்லது தொலைத்தொடர்பு கட்டமைப்பு சேவை இல்லாமலேயே, புளூடூத் இணைப்பைப் பயன்படுத்தி தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் தொழில்நுட்ப வசதியை இந்த Bitchat செயலி கொண்டுள்ளது. இணையச் சேவை முடக்கப்பட்ட நிலையிலும், மாணவர்கள் இந்த செயலி வாயிலாகத் தொடர்ந்து […]

ஜனநாயகனை மீண்டும் பார்க்கப்போகும் தமிழக முதல்வர்!

தாம் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தை தமிழக முதல்வர் விஜய் இன்று மீண்டும் பார்க்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எந்த திரையரங்கில் அவர் ஜனநாயகன் திரைப்படத்தை பார்க்கவுள்ளார் என்ற விடயத்தை தமிழக ஊடகங்கள் தெரிவிக்கவில்லை. தமது இறுதித் திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தை ஏற்கனவே விஜய் அதிகாரிகள் சகிதம் பார்த்திருந்தார். சென்னை அடையாறில் உள்ள திரைப்படக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறப்புத் திரையிடலில், தனது பெற்றோர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் அரசுத் தலைமைச் செயலக […]